அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா? - ஸ்ரீ மகாபெரியவா ...
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள். அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா? ஸ்ரீ மகாபெரியவா . அது 1965. சென்னைக்கு பாதயாத்திரை செய்த காஞ்சி மகாபெரியவர், வழியில் சுங்குவார்சத்திரத்தில் தங்கினார். அவரைப் பார்க்க சென்னை அன்பர்கள் பலர் இருந்தனர். அவர்களில் ஹிந்தி தெரிந்த அன்பர் ஒருவரை அழைத்தார் மகாபெரியவர். ராமேஸ்வரத்தில் உள்ள காமகோடி பீட மடத்துக்கு வரும் வடநாட்டு யாத்ரீகர்கள் பாராயணம் செய்ய, துளஸிதாசரின் 'அனுமன் சாலீஸா'வை அச்சடித்துக் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்து, அதற்காக உதவும்படி அந்த அன்பரிடம் கூறினார். அந்த அன்பரும் அனுமன் சாலீஸாவைப் படித்துக் காட்டினார். அப்போது, மடத்தின் சிப்பந்தி ஒருவர் ''ராமேஸ்வரத்தில் உள்ள அனுமன்தான் 1964 டிசம்பரில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இருந்து ஜோதிர்லிங்கங்களைக் காப்பாற்றினார்'' என்றார். அப்போது அந்த அன்பர் மகாபெரியவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். ''பெரியவா... ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். நான் வடக்கே சோம்நாத், ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர்ன்னு ஜோதிர்லிங்க தரிசனத்துக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம், ஜோதி...